இதற்கிடையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகளை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்து.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரை வரவேற்ற திமுக நிர்வாகிகள் உள்பட திமுக தலைவர் ஸ்டாலினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொற்று இல்லை என்றும், அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.