சென்னை

தமிழக அரசு கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  ஆனால் கேரள மாநிலத்தில் நேர்மாறாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இங்கு தினசரி பாதிப்பு 20000 ஐ தாண்டி உள்ளது.

அதே வேளையில் கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற வேளையில்  இங்கும் லேசான அதிகரிப்ப தென்படுகிறது.  இதையொட்டி தமிழக அரசு பல முன்னேசரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அதன்படி கேரளாவில் இருந்து கட, விமானம், ரயில் அல்லது சாலை வழியாகத் தமிழகம் வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையில் நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அல்லது இரு டோஸ் கொரோனா தடுப்பூஉசி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.