சென்னை
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது குறித்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்,
“இன்று தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1821 ஆகி உள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று கொரோனாவில் இருந்து குணமாகி 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் குணமானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் மேலும் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.
கொரோனாவால் குணமடைந்தோரில் யாருக்கும் இதுவரை மீண்டும் பாதிப்பு ஏற்படவில்லை”
என அறிவித்தார்.
[youtube-feed feed=1]