தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வித கல்லூரிகளை திறக்க அனுமதி
செப். 1 முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி/ அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்
தமிழகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை செயல்பட அனுமதி. 50% பார்வையாளர்களுடன் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுகிறJ.
வெளிமாநிலங்களுக்கு பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது
கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு : இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் இனி இரவு 10 மணி செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி