டெல்லி:
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக   நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல்கட்டமாக 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
50 நாட்களுக்கு பிறகு இன்று இயங்கும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு அரை மணி நேரத்தில் முடிவடைந்தது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர் களை அழைத்துச்செல்ல மே 1ந்தேதி முதல்   400 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இன்று முதல்  பயணிகள் ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. இன்று முதல் கட்டமாக 8 ரயில்கள் இயக்கப்படுகின்றன.  இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இன்று (12ந்தேதி)  இயக்கப்படும் ரயில்கள் விவரம்
டெல்லியில் இருந்து திப்ரூகர், பெங்களூரு மற்றும் பிலாஸ்பூருக்கு மொத்தம் 3 ரயில்கள் புறப்படுகின்றன.
ஹவுரா, பாட்னா , ராஜேந்திரா நகர், பெங்களூ, மும்பை மற்றும் அகமதாபாத்தில் இருந்தும் இன்று டெல்லிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாளை மே 13-ந் தேதியன்று மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி டெல்லியில் இருந்து 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து ஹவுரா, பாட்னா, ஜம்மு தாவி, திருவனந்தபுரம், சென்னை, ராஞ்சி, மும்பை, அகமதாபாத்துக்கு ரயில்கள் இயக்கப்படும்.
மே 14-ந் தேதியன்று 5 ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.
திப்ரூகர், ஜம்முதாவி, பிலாஸ்பூர், ராஞ்சியில் இருந்து 4 ரயில்கள் டெல்லிக்கும் டெல்லியில் இருந்து புவனேஸ்வருக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
மே 15ந்தேதியன்று  திருவனந்தபுரம், சென்னையில் இருந்து டெல்லிக்கு 2 ரயில்களும் டெல்லியில் இருந்து மட்கோனுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
மே 17ந்தேதியன்று  மட்கோன் டூ டெல்லி; டெல்லி டூ செகந்திரபாத் ரயில்களும்
மே 18ந்தேதியன்று  3 ரயில்களும் மே 20-ல் 2 ரயில்களும் இயக்கப்பட இருக்கின்றன.