கள்ளக்குறிச்சி :

ள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட   9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 நாட்களாக அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில், நேற்று மட்டும் 1,927 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை  36,841ஆக உயர்ந்துள்ளது. அதுபோல  உயிரிழப்பு எண்ணிக்கை 340ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர்  அனுமதிக்கப்பட்டார். அவரது, சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்னரே சிகிச்சை பலனின்றி அந்த 9 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]