பாட்னா
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்காகப் பிரச்சாரம் செய்யும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த கொரோனா தொற்று பல பிரபலங்களுக்கும் ஏற்பட்டு ஒரு சிலர் உயிர் இழந்துள்ளனர்.
தற்போது பீகார் மாநில தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் ஷேகன்வாஸ் ஹுசைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வர் சுஷில் மோடி, சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, ராஜிவ் பிரதாப் ரூடி உள்ளிடோர் இவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
எனவே இவர்கள் அனைவரும் தற்போது தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel