நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலி எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 1,542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் வகையில், 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை1114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 689 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலையில் 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.