தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம்: கடந்த 15 நாளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரிப்பு…

Must read

சென்னை: கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை கடந்த இரு வாரத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதலே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு நடவடிடக்கைளை தீவிரப்படுத்தி உள்ளது. இரவு பொதுமுடக்கம், ஞாயிறு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், கல்வி நிலையங்களையும் மூடிஉள்ளது. மேலும் நிறுவனங்களில் 50 பணியாளர்கள் மட்டுமே பணி செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நேற்று (18ந்தேதி) மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருந்து 2 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 21 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் 1,61,171 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர். இரு கடந்த இரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. பலர் மூச்சுத் திணறல் காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆக்சிஜன் தேவையும் நான்கு மடங்கு அதிகாரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளனர்.

ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் 8340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். ஆனால், 18ந்தேதி மாலை நிலவரப்படி, 1,61,171 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர்.

ஜனவரி 1ந்தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும்  366 கொரோனா நோயாளிகள் ஐ சியுவில் இருந்தனர். ஆனால், 17ந்தேதி மாலை நிலவரப்படி,  814 பேர் ஐசியு வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள 9829 ஐ சி யு படுக்கைகளில் 8.2% படுக்கைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன. அதிக பட்சமாக சென்னையில்  291 பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும், கோவையில் 72 பேர், சேலத்தில் 68 பேர் வேலூரில் 51 பேர், மதுரையில் 49 பேர் உள்ளனர்.

ஜனவரி 1ம் தேதி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோர் எண்ணிக்கை 1392 ஆக இருந்தது. ஜனவரி 17ம் தேதி கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்து 4013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதாவது தமிழ்நாட்டில் உள்ள 40757 ஆக்சிஜன் படுக்கைகளில் 9.8% தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இதில் சென்னையில் 1407 பேர், கோவையில் 499 பேர், மதுரையில் 291 பேர், வேலூரில் 193 பேர், சேலத்தில் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article