சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்J உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க. நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்கள் விவரம்