சென்னை: கொரோனா தீவிரமாக பரவி வரும் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை ஈரோடு செல்கிறார். அவரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 31,079பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20லட்சத்து 09ஆயிரத்து 700ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 486 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் கடந்த சில நாட்களாக கோவை முதலிடத்தில் உள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது கோவையில் 3 ஆயிரத்து 937 பேர் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மாநில அளவில் தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஈரோடு, திருப்பூர், கோவையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதற்காக அவர் இன்று மாலை ஈரோடு செல்கிறார்.

இன்று இரவு 9மணிக்கு  செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள சர்கியூட் ஹவுசில் தங்குகிறார்.

நாளை காலை 10 மணி முதல் 10.30 மணி வரை பெருந்துறை ஐஆர்டி மெடிக்கல் காலேஜில் ஆய்வு மேற்கொள்கிறார்.

11மணிக்கு குமரன் காலேஜ் திருப்பூரிலும்,

12.30 மணி முதல்வ 1.30 மணி முதல் இஎஸ்ஐ மெடிக்கல் காலேஜ், கோவையிலும் ஆய்வு மேற்கொள்கிறார்.

மாலை 4 மணி முதல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

மாடிலை 6மணிக்கு பத்திரகையாளர்களை சந்திக்கிறார்.