சென்னை
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது. குறிப்பாக சென்னை யில் தொற்று பரவல் மக்களின், எதேச்சதிகாரப் போக்கு மற்றும் கவனக்குறைவு காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் (21ந்தேதி) 53 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 601 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்
இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும், கே.எம்.சி அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.