சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத் தலைநகர் சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம்  இன்று மேலும் 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று (21/06/2020 மாலை 6 மணி நிலவரம்)  ஒரே நாளில் மேலும் 2532  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  59,377 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டிலும், இதுவரை 3745 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1933 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1762 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 49 பேர் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று  மேலும் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதையடுத்து  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,861-ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.