சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து வருகிறது.
இன்று ஒரே நாளில் மேலும் 5709 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1182 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 5820 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதுபோல தொற்று பாதிக்கப்பட்டோரில் சிகிச்சை பலனின்றி 121 பேர் பலியாகி உள்ளனர்.
இன்றைய தேதியில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை (தனிமைப்படுத்தல் உட்பட) 53,860
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,698
வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து உள்நாட்டு விமான நிலையத்தின் மூலம் திரும்பிய பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவருக்கும், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
வெளிமாநிலக்ளில் இருந்து சாலை மார்க்கமாக திரும்பிய பயணிகளில், கர்நாடகா – 3, புதுச்சேரி – 2 ஆந்திரா – 1, கேரளா · 1 ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை நேர்மறையாக சோதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 3,49,654
இன்று RT-PCR ஆல் சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 67,025 / இதுவரை சோதனை நடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,45,803
இன்று RT-PCR ஆல் சோதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 65,075 இதுவரை சோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37, 12,657 வரை
இன்று சோதனை செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 3,445 , பெண்கள் 2264.
இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 2, 10,953 , பெண்கள் 1,38,672 , திருநங்கைகள் 29 பேர்.