டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,67,274 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 52,889 ஆகவும் அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில் இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை கொரோனா பாதிப்பு 27,67,274 ஆக அதிகரித்து உள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 1092 பேர் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக பலி யானோரின் எண்ணிக்கை 52,889-ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக, 6,76,514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 20,37,871 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து cள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள தகவலின்படி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை 3,17,42,782 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 8,01,518 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.