சென்னை:
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம்தான், என்.சங்கரய்யா தன்னுடைய 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
100 வயதை அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், கடந்தாண்டுக்கான தகைசால் தமிழர் அவருக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. எனினும், தகைசால் தமிழர் விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று என். சங்கரய்யா அறிவித்து விட்டார்.
எளிமையின் சின்னமாக, இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம் வரும் என்.சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரர் ஆவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.. நூறு வயதை அடையும் நிலையிலும் என்.சங்கரய்யா இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது சென்னையில் கொரோனாவைரஸ் அதிகரித்து வரும் நிலையில், சங்கரய்யாவுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel