சென்னை
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த பாதிப்பு தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் அதிகமாக உள்ளது.
இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 உயர்ந்துள்ளது.
இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075 ஆகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒருவர் உயிர் இழந்து மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆனது.
இன்று வரை 50 பேர் குணமாகி உள்ளனர்.