ஜெனிவா:
உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 2,65,244 -ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகில் 210க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் விவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 லட்சத்து 34 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்து 244 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 6ஆயிரத்து 633 பேர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 1,929 பேர் பலியாகினர். இதனால் அங்கு தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74,809 -ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் 2,53,682 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 25,857 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 2,14,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 29,684 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் 2,01,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 30,076 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்சில் 1,74,191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் இதுவரை 1,68,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.