சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவள்ளூர் உள்பட 6மாவட்டங்களில் இன்றுமுதல் 21ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு 5,766 பேர் உயிரிழந்துள்ள நலையில், 2,78,270 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இதனிடையே தமிழக முதல்வர் எடப்டி பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய முதல்வர் இன்று முதல் (17ந்தேதி) ஆகஸ்டு 21- ஆம் தேதி வரை திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.
இன்று (17ந்தேதி) திருவள்ளூர் மாவட்டத்திலும், 20-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும் ,21-ஆம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.