நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெண் காவலர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற , தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு , அந்த மாநாட்டில் கலந்துகொண்ட  வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில்,அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா நோய் தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் ஒருவர் பெண் காவலர்.

இவர்களது சளி, ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டில் 6  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.