டெல்லி:
இந்தியாவில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 5,734-லிருந்து 5,865-ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலியானவர்கள் எண்ணிக்கையும் 169 ஆக உயர்ந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார துறை அமைச்சக இணை செயலர் லாவ்அகர்வால், இந்தியாவில் கொரோனாவால் 5,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உய்ரந்துள்ளது என்று தெரிவித்தவர், கொரோனா தொற்றில் இருந்து 473 பேர் குணமடைந்து இருப்பதாகவும் கூறினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறியவர், 49 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் செய்து இருப்பதாகவும், முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் 1.7 கோடி வாங்க ஆர்டர் செய்துள்ளோம். என்று கூறினார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா முழுவதும் 80ஆயிரம் தனி படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பிலான 10 சிறப்பு குழுக்கள் 9 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவில் குறித்த மக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]