Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 0.1 சதவீதம் மீண்டும் அதிகரிப்பு… மண்டலம் வாரியாக விவரம்…

Sep 28, 2020

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. கடந்த ஒருவாரத்தில்,  0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பொதுமுடக்கத்தில் இருந்துஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.  இருந்தாலும் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு தினசரி 6ஆயிரம் அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில், தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டி ஆயிரத்து 200 வரை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் படி சென்னையில் கடந்த 7 நாட்களில் 0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,63,423 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,49,601 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 10,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,166 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் 6.3 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3.7 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.4 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், பெருங்குடியில் 1.8 சதவீதமும், ராயபுரத்தில் 0.9 சதவீதமும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 0.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலத்தில் தலா 0.1 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.2 சதவீதமும், அடையாறு மண்டலத்தில் 0.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 0.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 1.3 சதவீதமும், திருவொற்றியூர் மண்டலத்தில் 2 தவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 6.8 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 60.21 சதவீதம் பேர் ஆண்கள், 39.79 சதவீதம் பேர் பெண்கள். மேலும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.05 சதவீதமும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 5.92 சதவீதமும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.74 சதவீதமும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 18.70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.72 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.50 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.69 சதவீதமும், 70 முதல் 79 வயதினர் 5.53 சதவீதமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.15 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி
ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சோதனை: சென்னை மருத்துவமனைகளில் தொடங்கியது…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer