கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘அசுரன்’ படத்தில் நடித்த அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அம்மு அபிராமி கூறியிருப்பதாவது:
“ஜுரம் அறிகுறி தெரிந்தபிறகு செய்த பரிசோதனையில் எனக்கு கோவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரின் அறிவுரையின் பேரில் நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவைப்படும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பைவிட வலிமையாக மீண்டு வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.
After fever symptom I have tested positive for covid19,
With Doctor's advise I have Isolated myself at home and taking required medicines and care😄…Will be back stronger than ever😇please stay safe and take lots of care❤️— AmmuAbhirami (@Ammu_Abhirami) May 2, 2021