சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, இறப்பு விகிதத்தை குறைத்து காட்டி வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு உள்ளது.
பொதுவாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழகஅரசு அளித்து வரும் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் இன்றவும் கொரோனா தொற்றும் பரவல் இருக்கும் நிலையில், அமைச்சர்களின் வற்புறுத்தலின்பேரில், மாவட்ட ஆட்சியர், அது தொடர்பாக தகவல்களை மறைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அதை வெளிக்கொணர்ந்து உள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள வீடியோவில்,
தமிழகத்தில் பரவலாக இறப்பு சதவீதத்தை குறைத்து காண்பிக்கும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது இதைப் பொய் என்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்றும் கூறுகிறது நமக்கு வரக்கூடிய தகவல்கள் நம்பத் தகுந்ததாக உள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மே 28ந்தேதி அன்று பகல் 12 மணி 30 நிமிடங்களுக்கு 50 வயது ஆண் ஒருவர் இறந்துள்ளார், அவரது போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் அவர் கொரோனாவல் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், அது தொடர்பாக தகவல் இல்லை. மேலும, ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து காண்பிக்க வில்லை, மேலும், 69 வயது ஆண் ஒருவர் இறந்ததற்கான ஆதாரம் உள்ளது. அதுகுறித்தும், தமிழக சுகாதாரத்துறை இன்றுவரை தெரிவிக்கவில்லை.
இது மட்டுமின்றி, கடலூர் சிதம்பரத்தில் ராஜா முத்தையா கல்லூரி மருத்துவமனையில் 87 வயதான ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டு, கடந்த 4ந்தேதி அன்று மரணமடைந்துள்ளார். அவரது மரணம் குறித்தும் தமிழகஅரசு சுகாதாரத்துறை அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.
இதுபோன்ற மறைக்கப்படும் தகவல்களை பார்க்கும்போது, தமிழக சுகாதாரத்துறை மீது வலுவான சந்தேகம் எழுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.