டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், குளிர்காலங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பானது, கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக 600-க்கு கீழ் குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும், புதிதாக மேலும், 46,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்து 97 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 7,48 ,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் சதவிகிதமும் முன்னேற்றம் அடைந்தது. அதுபோல உயிரிழப்பும் வெகுவாக குறைக்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 99,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து, மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, கடந்த 5 வாரங்களாக தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதுவரை பலி எண்ணிக்கை 600ஐ தாண்டி இருந்த நிலையில், நேற்று உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்திருக்கிறது. அதாவது 579 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தொற்று பரவலில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று 9,060 பேருக்கு மேலும் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை 15,95,381 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,69,810 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,456 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,155 பேர் உயிரிழந்துள்ளனர்.
2வது இடத்தில் ஆந்திரா தொடர்கிறது. அங்கு நேற்று 3,986 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 7,83,132 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,40,229 பேர் குணமடைந்துள்ளனர். 36,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.
3வது இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. அங்கு புதிதாக 7,012 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 7,65,586 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,45,825 பேர் குணமடைந்துள்ளனர். 1,09,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,478 பேர் உயிரிழந்துள்ளனர்.
4வது இடத்தில் உத்தர பிரதேசம் இருக்கிறது. அங்கு புதிதாக 2,486 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. மாநிலத்தில் 4,55,146பேர் வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 4,15,592 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32,896 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 6,658 பேர் உயிரிழந்துள்ளனர்.
5வது இடத்தை கேரளா பிடித்துள்ளது. அங்கு நேற்று 5,022 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,46,881 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,52,868 பேர் குணமடைந்துள்ளனர். 92,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,182 பேர் உயிரிழந்துள்ளனர்.