சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு  உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லையில், நேற்று பலர் உயிரிந்த நிலையில், மின் மயானத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் எரிக்க பல மணி நேரங்களாக காத்திருக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வட மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அவலம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை தமிழகத்தில் தீவிரமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது.  நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது கிராமப்பகுதிகளிலம் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் பலர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் உடல்கள் அரசுக்கு தெரியப்படுத்தப்படாமல் அடக்கம் செய்யப்படு வருகிறது.

ஆனால், தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,285 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 468 பேர் இறந்தனர் என்று தெரிவித்துள்ளது. நேற்று   பாதிக்கப்பட்டவர்களில் 19,272 ஆண்களும் 15,013 பெண்களும் அடங்குவர்.  நேற்று ஒரே நாளில், 28,745 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,06,652,  ஆக உள்ளது.

ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சென்னை போன்ற நகரப்பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பலர் மூலம் கிராமப்புறங்களிலும் தொற்று பரவி வருவதாக பல பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.  பல மாதங்களாக தொற்று பாதிப்பில் இருந்து ஏராளமான கிராமத்தினர் தங்களை பாதுகாத்துக்கொண்டு வந்த நிலையில், தற்போது, நகரங்களில் இருந்து கிராமம் சென்றவர்கள் மூலமாக,  அங்கும் தொற்றின் தாக்கம் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல்  பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.‘

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்- 75,57,666 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில்,  இன்று ஒரே நாளில் 2,24,544 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகத்தில் நேற்று 468  உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது   கடந்த பத்து நாட்களில் மிக அதிகம். ஆனால் கிராமப்புறங்களில் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளையும் கணக்கிட்டால் உயிரிழப்பு 500ஐ தாண்டும் என தெரிகிறது. உண்மையான தகவல்களை தமிழக அரசு வெளியிடுகிறதா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று  ஒரே நாளில் 4,041 பேர் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர கோயம்பத்தூரிலும் மிக அதிகமாக 3,632 பேர் இன்று புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தவிர,  செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 490 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் மட்டுமே உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 ஆனால்,  திருநெல்வேலி சிந்துபூந்துறை மின் மயானத்தில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டுவதற்காக காத்து கிடந்தது. ஏராளமானோர் பிணங்களை வரிசை வைத்துவிட்டு, காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வடமாநிலங்களில் மட்டும்தான் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வந்தது. ஆனால்,  தற்போது தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு அவலம் ஏற்பட்டுள்ளதை இந்த வீடியோ தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த  வீடியோ வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் வரிசையில் நின்ற காலம் கடந்து விட்டது. இப்போது மயானத்தில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உயிரிக்கொல்லி நோயான கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் முக்கவசம் அணிவது கட்டாயம். மேலும் ஊரடங்கும் கடுமையாக்க வேண்டும்.

இதை மாநில அரசு கடுமையாக நிறைவேற்றினால் மட்டுமே  தமிழகத்தில் இருந்து கொரோனா ஓடோடிச்செல்லும்… இல்லையேல் இன்னும் பல ஆயிரக்கனக்கானவர்களை பலிகொண்டு விடும்…  எச்சரிக்கை…