வேதனையான சாதனையில் முந்தும் குஜராத்..
10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விஷயத்தை எடுத்தாலும் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்பார்கள் .லண்டன் பேருந்து நிலையத்தை எல்லாம் அகமதாபாத் பேருந்து நிலையம் போல போட்டோஷாப்பில் சித்தரித்து, முதலமைச்சர் மோடி தலைமையில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிட்டதாக பாஜக ஆதரவாளர்கள் பெருமை பட்டுக்கொள்வார்கள்.
ஆனால் குஜராத் உண்மையிலேயே அப்படி ஒரு வளர்ச்சியைக் கண்டதில்லை என்று, காலப்போக்கில் வெளியான அப்பட்டமான உண்மைகள் அம்பலப்படுத்தி வந்தன.
இப்போது கொரோனா விவகாரம்.. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுப் பலியானவர்களின் பட்டியலில் குஜராத் மாநிலம் நாட்டிலேயே ஆறாவது இடத்தில் இருந்தது.. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஐந்தே நாளில் ஆறாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளது..
கொரோனா விவகாரத்தில் குஜராத் உடன் சேர்த்து முந்திக் கொண்டு இருப்பது அதன் தாய் மாநிலமான மகாராஷ்டிரா மாநிலம் என்பது இன்னொரு வேதனையான தகவல்..
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 39. இதில் மகாராஷ்டிரா 18 குஜராத் 13.. அதாவது இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 39 பேர். இது நாட்டின் பலி எண்ணிக்கையில் 79% ஆகும்..
நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி வரை கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 683 பேர். இதில் மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் மட்டும் பலியானவர்கள் மொத்தம் 372 பேர்..
அதாவது இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கையில் 55%, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே..இதனால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல, மாநில அரசுகளும் கதிகலங்கிப்போயிருக்கின்றன.
– வி.பி.லதா