சென்னை:  தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் , தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொற்று பரவல் குறைந்து வந்தாலும், சென்னையில் மட்டும் 29 பகுதிகள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

அடையாறு மண்டலத்தில்  9 பகுதிகள்,

அண்ணாநகர் மண்டலத்தில்  8 பகுதிகள்,

கோடம்பாக்கம் மண்டலத்தில் 6 பகுதிகள்,

மாதவரம் மண்டலத்தில்  3  பகுதிகள்,

வளசரவாக்கம் மண்டலத்தில்  1 பகுதி

பெருங்குடி மண்டலத்தில்  1 பகுதி

சோழிங்கநல்லூர் மண்டலத்தில்  1 பகுதி

மேலே உள்ள 29 பகுதிகளும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.