சென்னை

சென்னை நகரில் தினம் 1000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் நகரில் தடை செய்யப்பட்ட பகுதிக்ள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த செப்ட்ம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் சென்னையில் தினசரி 1000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.  கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிகை 9,938 பேராக இருந்தது.  அது சிறிது சிறிதாக நேற்று அதாவது அக்டோபர் 3 ஆம் தேதி அன்று சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,311 பேர் ஆகி உள்ளது.

கடந்த 10 நாட்களில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 174 ஆக உள்ளது.  மொத்தம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10 நாட்களில் 12,835 அதிகரித்தது.  ஆனால் இந்த 10 நாட்களில் 10,213 பேர்க்ள் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.   ஆகவே தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என இருந்தவை அனைத்தும் குறைந்தனது   ஆனால் தற்போது சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்த அறிவிப்புக்கள் வரத் தொடங்கி உள்ளன.   இதுவரை 10 தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆலந்தூர் மண்டலத்தில் 4, கோடம்பாக்கம் மண்டலத்தில் 3, சோளிங்க நல்லூர் மண்டலத்தில் 2 மற்றும் வளசரவாக்கத்தில் 1 உள்ளன.