சென்னை:

மிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 70,977  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  47,650  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சென்னை காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் முன்களத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் இந்த கொரோனா தாக்கத் தவறவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம்,  சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பாலமுரளி என்பவர் கொரோனாவின் பிடியில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், நேற்று மட்டும்  29 போலீசார் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவல்துறையினர் எண்ணிக்கை 1005 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை    குணமடைந்து பணிக்குத் திரும்பிய வர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. பலி ஒன்றாக உள்ளது.