
சென்னை: தமிழக தலைநகரில், பல்வேறு மண்டலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை, அதில் வருகைதந்த மக்கள் மற்றும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட எண்ணிக்கை தொடர்பாக ஜூலை 2 வரையிலான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில், ராயபுரம் மண்டலத்தில்தான் அதிகளவாக 1305 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கடுத்து அண்ணாநகர் மண்டலத்தில் 1127ம், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1096 முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 8ம் தேதியிலிருந்து, ஜூலை 2ம் தேதிவரை, மொத்தமாக11,376 முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு மொத்தம் 7,41,826 பேர் வருகைபுரிந்துள்ளனர்.
அதில், அறிகுறியுள்ள நபர்களின் எண்ணிக்கை 33,090. பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 29,051.
விரிவான விபர அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது;

Patrikai.com official YouTube Channel