சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

Must read

சென்னை:
சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று நாடு முழுவதும் தொற்று பாதிப்பு சற்று குறைந்த எண்ணிக்கையில் பதிவானது.

இந்நிலையில், 1,68,063 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இச்சூழலில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜன.10-ஆம் தேதி முன்களப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியானவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது. தற்போது இப்பணியை மேற்கொள்ள 15 சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

More articles

Latest article