க்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்ட முதல் தேசிய அளவிலான கணக்கீட்டின்படி, கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்கப்பட்ட 10 குழந்தை நோயாளிகளில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களில் குறைந்தது ஒரு மாதிரியான அறிகுறியைக் கொண்டுள்ளனர். மேலும் பத்தில் ஆறு பேரில் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளார். பொதுவாக குழந்தைகள் அதிக அளவில் பாதிப்படையவில்லை என்றும், சீனா தனது ஆய்வுகளில் இருந்து வெளியிட்ட விவரங்களுடன் அமெரிக்காவின் விவரங்களுடன் ஒத்துப் போகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சீனா, ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் செயல் திட்டக் குழு வெளியிட்ட அறிக்கையும் இதே நிலையை எதிரொலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி இளம் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை எனினும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள, நோய் எதிர்ப்பு இல்லாதவர்களாக உள்ளனர்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சி.டி.சி வெளியிட்ட தேசிய அளவிலான அறிக்கை பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 2 வரையிலான கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் கிட்டத்தட்ட 150,000 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டது. இந்த 150,000 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில், 2% பேர் குழந்தைகள் ஆவர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில், இருந்த வளர்ந்த குழந்தைகள் மற்றும் மற்றும் பதின்ம வயதினர் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளதையும், கடுமையான நோய் தாக்கம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிலான பாதிப்புகள் பிறந்த குழந்தைகளுக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இதில் துரதிஷ்டவசமாக குழந்தை நோயாளிகளின் பெரும்பாலான விவரங்கள் முறையாக பராமரிக்கபடாததால், இந்த அறிக்கை சார்ந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து அளிக்கப்பட ஆரம்பகால கணக்கீடுகள் ஒருவரின் நோயெதிர்ப்பு வலிமை வயதுக்கு ஏற்றவாறு மாறுபடுவதை சுட்டிக் காட்டியது. வயதானவர்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு எளிதாக உள்ளாவர்கள் என்பதை இது உறுதிப்படுத்தியது. சீனாவின் ஷென்சென் பகுதியில் 391 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,286 பேருடன் நடந்த ஆய்வில், பாதிக்கப்பட அதிக வாய்ப்புடைய குழந்தைகள் இதில் 7.4% பேர் என அறியப்பட்டது. மேலும் பாதிக்கப்பட சாத்தியமுள்ள 60-69 வயதுடைய பெரியவர்கள் எண்ணிக்கை 15.4 சதவீதமாக இருந்தது. சீனாவின் 30 மாகாணங்களில் 552 மருத்துவமனைகளில் இருந்து 1,099 ஆய்வகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவை பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்கள் என அறியப்பட்டது.
பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கொரோனா குழந்தைகளின் மீது சிறிய அளவிலான தாக்கத்தையே உண்டாக்கியுள்ளதென தெரிவிக்கப்பட்டது. இதன்படி, “18 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒப்பீட்டளவில் 2.4% சதவிதத்தினர் ஆவர் என்று கூறப்பட்டிருந்தது. ” வுஹானுக்குள், 2019 நவம்பர் முதல் 2020 ஜனவரியின் முதல் இரண்டு வாரங்கள் வரை எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் ஆரம்ப நாட்களில், அமெரிக்காவில் உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தனது நாட்டில் உள்ள கொரோனா தொற்றின் போக்கை ஆராய, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கொரோனா தொற்று மற்றும் இறப்பின் போக்கு பற்றிய தகவல்களின் தொகுப்பை ஆராய்ந்தது. அதில் குழந்தைகள், பெரியவர்கள் அவர்களின் வயது சார்ந்த கொரோனா தொற்றின் பல உண்மைகள் தெளிவாகின. இந்த தகவல்களின்படி, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களில் ஐம்பது வயதுக்கும் குறைவான இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகித்திற்கும் குறைவாகவே இருந்தது. மேலும், இறந்தவர்களில் பெரும்பாலானோர், ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதும், ஏற்கனவே பல உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகியிருந்தவர்கள் என்பது புலனாகியது.
“நோய் உறுதிப்படுத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, பெரியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததிற்கான காரணத்தை அறிய ஒரு ஆய்வை மேற்கொண்ட சீன ஆய்வுகளின் தலைவர், சிறார்களில் நோய் தொற்றின் விளைவுகள் கடுமையாக இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்தனர்.பின்னர், தங்களது அறிக்கைகளை சீன நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் சமர்பித்தனர். இவர்கள் இந்த ஆய்வுக்காக, தோராயமாக, 2200 நோயாளிகளை ஆய்வு செய்தனர்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. நாம் கட்டுபாடுகளை சரியாக கடைபிடித்தால் அது கொரோனா தொற்றை ஒரு கட்டுக்குள் வைக்க உதவி செய்கிறது. குறிப்பாக தனித்திருத்தலை சரியாக கடைபிடிக்க வேண்டும். இதுவரை, அமெரிக்காவில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட சிறுவர்களில், பத்தில் ஒன்பது பேர் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட யாருடனேனும் தொடர்பில் இருந்துள்ளனர். அனைத்து தகவல்களையும் ஒன்றிணைத்து பார்க்கும்போது, நான் நேரிடையாகப் பெறும் தகவல்கள் மதிப்புமிக்கதாக உள்ளது. ஏனெனில், இந்த கொரோனா தாக்குதல் நாம் இதுவரை கண்டிராதது. கிடைத்திருக்கும் தரவைக் கொண்டு கொரோனா தொற்றை சிறப்பாகக் கையாள கற்றுக்கொள்வோம்.
ஆங்கில மூலம்: நிகிலா நடராஜன்
தமிழில்: லயா