மும்பையின் தாராவி – ஊரடங்கின் போது
கொரோனா வைரஸின் தீவிரப் பரவல் காரணமாக, உலகின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் சுமார் 500 இலட்சம் மக்கள் கடுமையான வறுமையில் தள்ளப்படலாம் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. வளரும் நாடுகள் இந்த வறுமையின் காரணமாக சுமார் 30 வருடங்கள் பின்தங்க வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் உலக மேம்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வியாழன் அன்று வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் எச்சரித்தது. “பாதிப்பு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும்” என்று லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச மேம்பாட்டு பேராசிரியர் இணை ஆசிரியர் ஆண்டி சம்னர் கூறினார், அவர் எதிர்வரக் கூடிய வறுமையை “வறுமையின் சுனாமி” என்று வர்ணத்தார்.

“கோவிட் உலகளாவிய வறுமையின் அதிகரிப்புக்கு பெருமளவில் வழிவகுக்கும். இது உண்மையில் உலகை 10 வருடங்கள் பின்தங்க வைக்கும். பல நாடுகள் 30 ஆண்டுகள் பின்தங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது” என்று சாம்னர் கூறினார். மூன்று விதமான வறுமையின் மூன்று மட்டங்களில் ஒரு நாளைக்கு பொருளாதாரத்திற்கு என செலவிடப்படும் தொகை ($1.90 (£ 1.53), $3.20 மற்றும் $5.50) குறைக்கப்பட்டதால் ஏற்படும் விளைவுகளை ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதற்காக அவர்கள் உலக வங்கியின் தகவல்களின் தொகுப்புகளை பயன்படுத்தியிருந்தனர். ஒரு நாளைக்கு நுகர்வு 5% என்ற அளவுக்கு குறைந்தாலும், தற்போதைய நிலையின் தாக்கத்தால், இது 1990 -க்குப் பிறகு ஏற்படவுள்ள வருமானம் சார்ந்த வறுமையின் அதிகரிப்புக்கு தொடக்கமாக இருக்கும் என்று முடிவுகள் காண்பித்தன.
ஐரோப்பாவில் தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காக்கும் பொருட்டு விரைவான நடவடிக்கைகளை எடுக்க அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நிதியத்தின் தலைவர்கள் சந்திப்பில் அழைப்பு விடுக்கபடவுள்ளது. “ஏழை நாடுகளையும் ஏழை மக்களையும் காக்கும் பொருட்டு, 2.5 பில்லியன் டாலர் அளவிலான பொருளாதார மீட்பு திட்டத்தை ஒப்புக் கொள்ளுமாறு “ஆக்ஸ்பாம்” அழைப்பு விடுத்துள்ளது. வருமான இழப்பின் உடனடி விளைவுகளை குறைக்கும் வகையிலான பாதுகாப்பு திட்டங்களையும், நீண்டகால வறுமையில் மக்கள் சிக்கித் தவிப்பதை தவிர்ப்பதற்கான பொருளாதாரக் மீட்புக் கொள்கைகளையும் உருவாக்க அவசர நடவடிக்கை தேவை,” என்று சாம்னர் கூறினார்.
“மக்களின் இயல்பு நிலை திரும்ப அவர்கள் இன்னும் 30 ஆண்டுகள் காத்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று சாம்னர் கூறினார். “வறுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த தேவைப்படும் காலம் குறைவே என்பதால், தற்போதைய கொரோனா நெருக்கடியைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது அதை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது பற்றி அரசாங்கங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், இதற்கு உங்களுக்கு சில வெளிப்படையான, மறுவிநியோக திட்டங்கள் தேவைப்படும்.” 2015-இல் ஐ.நா நிர்ணயித்த நிலையான அபிவிருத்தி திட்டங்களின் இலக்குகளின் முன்னேற்றம் குறித்து, தற்போதைய கொரோனாவின் உலகளாவியத் தாக்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் உலகளாவிய சுகாதார திட்டங்களும் அடங்கும்.

“பல வளரும் நாடுகள் அவர்களின் முறைசாரா பொருளாதாரம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படும்” என்று சாம்னர் கூறினார். இதனால் கொரோனா கட்டுபாடுகள் நடைமுறையில் இருந்தாலும், பலரும் வேலைக்குச் செல்ல நேரிடும் அல்லது இந்தியாவைப் போலவே, மக்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். கிராமங்கள் பல வளங்களைக் கொண்டிருந்தாலும் அங்கும் கொரோனா பரவல் குறித்த அபாயங்கள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. 80% மக்கள் முறைசாரா துறையில் பணிபுரியும் இந்தியாவில் ஊரடங்கு போன்ற முடக்கம், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பசி, வீடற்ற நிலை போன்றவற்றில் சிக்கி தவிக்க வைத்துள்ளது. இதை மார்ச் மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்கூட்டியே எச்சரித்தது. உலகின் 2 பில்லியன் முறைசாரா தொழிலாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. ஏனெனில் அவர்கள் அதிக ஆபத்துள்ள இந்த சூழலிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பெரும்பாலானவர்கள் சுகாதாரமற்ற சூழலில் நெருக்கடியான இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கையின் ஆசிரியர்கள் மேற்கொண்ட கீழ் விவரிக்கப்படும் ஆய்வு மற்றும் கணக்கீடுகள்,  நுகர்வு 5%, 10% அல்லது 20% ஆக சுருங்குமா என்பதைக் கணக்கிடும் கணக்கீடுகளின் குறித்த தங்கள் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, தெற்காசியா மற்றும் துணை-சஹாரா ஆப்ரிக்காவில் மிக மோசமான பாதிப்புகள் உண்டாகலாம் என்றும், அங்கு புதிதாக, ஒரு நாளைக்கு 1.90 டாலர் செலவிடப்படும் வறுமையின் அடுக்கில் வசிக்கும்  80% மக்கள் புதிதாக வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளது என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.  மேலும் 10% வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் நிலையை ஆய்வு செய்ததில், ஒரு நாளைக்கு 5.50 டாலர்கள் செலவழிக்கும் வறுமையின் அடுக்கில் வசிப்பவர்கள், சுமார்  40% மக்கள் புதிதாக வறுமையில் தள்ளப்படுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபாம் முன்வைத்துள்ள புதிய உலகப் பொருளாதார மீட்பு திட்டத்தில், வளரும் நாடுகள் கொடுக்க வேண்டிய $1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை இரத்து செய்வது பற்றியும் அடங்கும்.  மேலும் அதே தொகையை சர்வதேச இருப்புக்குள் வைக்க வேண்டும் என்றும், வளரும் நாடுகள் தங்கள் சுகாதாரக் கட்டமைப்புகளை அமைப்புகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் அதைப் பயன்படுத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஏற்கெனவே முழுமையாக துடைத்தெறியப்பட்ட ஏழை நாடுகளில் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ரிக்‌ஷாக்களை இழுப்பது, தேயிலை பறித்தல் அல்லது துணிகளைத் தைப்பது போன்ற வேலைகளை செய்து  வருகின்றனர். அவர்களுக்கு, நோய்வாய்ப்படுதல் ஊதியம், அரசாங்க உதவி போன்ற சமூகப் பாதுகாப்பு  அம்சங்கள் எதுவும் இல்லை” என்று ஆக்ஸ்பாம் ஜி.பியின் தலைவர் டேனி ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார்.
“நமது உலகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், அதை எளிதாகக் கடக்க முடியும். அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள உலக வங்கி மற்றும் ஜி 20 கூட்டங்கள், உலகத் தலைவர்களுக்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவல்ல ஒரு கூட்டு பொருளாதார மீட்புப்பணியில் ஒத்துழைக்க ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கும்.”
ஏழை நாடுகளின் $12 பில்லியன் கடன் இரத்து
கொரோனா வைரஸுக்கு எதிராக பொருளாதாரப் போரை நடத்தும் உலகின் 77 ஏழ்மையான நாடுகளுக்கான கடன்களை ஜி20 இரத்து செய்துள்ளன. மே 1 முதல் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலுத்தப்பட வேண்டிய 12 பில்லியன் டாலர்கள் இந்தக் கூட்டத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 15 இல் நடைபெற்ற  ஜி20 நிதி மந்திரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால், உலகின் ஏழ்மையான 77 நாடுகள் பெருமளவில் பயன்பெறும். இந்த ஏழை நாடுகளில் 15 ஐத் தவிர மற்ற அனைத்தும் தற்போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.  கொரோனாவின் பாதிப்புகளால், விலை வீழ்ச்சி, உற்பத்தி மற்றும் தயாரிப்புகள் துறை, சுற்றுலா என அனைத்தும் முடங்கி கிடப்பதால், இந்த நாடுகளுக்கு இந்த இரத்து முடிவுகள் பெருமளவிலான பயன்களை வழங்கும்.

இருப்பினும், 77 ஏழ்மையான நாடுகளில் பலவற்றில் எப்படியும் தங்கள் கடனைத் திருப்பி செலுத்தும் வாய்ப்புகள் இல்லை” என்று ஜோன்ஸ் கூறுகிறார். எனவே கடன் ரத்து செய்வதற்கான திட்டமிடல் என்பது “அந்த செயலை சற்றே ஆதரவாக நிர்வகிப்பது மட்டுமே. ஆனால், சரியான முன்வழிகாட்டுதல் இல்லாத இந்த நெருக்கடியை சமாளிக்க இதைவிடவும் மேலதிக நடவடிக்கைகள் தேவை.” என்பதே உண்மை. உலகெங்கும் பசியில் வாடுபவர்களும் நம்மை போன்ற மனிதர்களே என்பதை உணர்வோம் !!!