ஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும் உயிரிழப்பும் பதினோறு லட்சத்து 78ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 6,01,880 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இவர்களில், 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 35 சதவிகிதம் அளவிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்புகளை உறுதி செய்வதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.