சென்னை: தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்து வருகிறார். அதன்படி அவர் அதன் விவரங்களை இன்று வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் இன்று 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். கோவை 60, திண்டுக்கல் 46, நெல்லை 56, ஈரோடு 58, நாமக்கல் 41, ராணிப்பேட்டை 27, தேனி 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் 23, செங்கல்பட்டு 28, மதுரை 25, திருச்சி 36, விழுப்புரம் 20, திருவாரூர் 13, சேலம் 14 பேரும், திருவள்ளூர் 13, விருதுநகர் 11, தூத்துக்குடி 22, நாகப்பட்டினம் 12 பேருக்கும் கொரோனா உள்ளது.
திருப்பத்தூர் 16, கடலூர் 13, திருவண்ணாமலை 09, கன்னியாகுமரி 14, சிவகங்கை 5, வேலூர் 11, தஞ்சாவூர் 11, காஞ்சிபுரம் 6, நீலகிரி 4, திருப்பூர் 26, ராமநாதபுரம் 2, கள்ளக்குறிச்சி 3, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தலா 1, தென்காசி 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை.