வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,03,210 உயர்ந்து 54,01,222 ஆகி இதுவரை 3,43,798 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,03,210 பேர் அதிகரித்து மொத்தம் 54,01,22 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4373 அதிகரித்து மொத்தம் 3,43,798 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 22,47,098 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,562 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,929 பேர் அதிகரித்து மொத்தம் 16,66,828 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1036 அதிகரித்து மொத்தம் 98,683 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,46,850  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 17,133 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,508  பேர் அதிகரித்து மொத்தம் 3,47,398 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 965 அதிகரித்து மொத்தம் 22,013 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,42,587 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,434  பேர் அதிகரித்து மொத்தம் 3,35,882  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 139 அதிகரித்து மொத்தம் 3,388 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 2300  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று 468 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,82,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 50 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 28,678 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6663  பேர் அதிகரித்து மொத்தம் 1,31,423 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 142 அதிகரித்து மொத்தம் 3868 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 54,385 பேர் குணம் அடைந்துள்ளனர்.