சென்னை
இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று 1149 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதில் சென்னையில் இன்று 804 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,802 ஆகி உள்ளது.
இன்று கொரோனாவால் 13 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 173 ஆகி உள்ளது.
இன்று 757 பேர் குணம் அடைந்து மொத்தம் 12757 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel