டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,987 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ள போதிலும் பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.   தற்போது மத்திய அரசு ஆலோசனைப்படி பல மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இதனால் பாதிப்பு மிகவும் அதிகரிக்கலாம் என பலரும் அச்சை தெரிவிக்கின்றனர்.

நேற்று இந்தியாவில் 3582 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்த எண்ணிக்கை 52987 ஆக உள்ளது.  இதில் நேற்று மட்டும் 91 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1785 ஆகி உள்ளது.  நேற்று 1191 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 15351 ஆகி உள்ளது.  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,867 பேர் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1233 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,758 ஆகி உள்ளது  இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 651 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 275 பேர் குணமடைந்து மொத்தம் 3094 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 380 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,625 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 396 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 110 பேர் குணமடைந்து மொத்தம் 1500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 428 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,532 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 74 பேர் குணமடைந்து மொத்தம் 1547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 971 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,829 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31 பேர் குணமடைந்து மொத்தம் 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 159 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,317 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 93 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 214 பேர் குணமடைந்து மொத்தம் 1739 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.