டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,423 ஆக உயர்ந்து 3868 பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 6663 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,31,423 ஆகி உள்ளது.  நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3868 ஆகி உள்ளது.  நேற்று 2552 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 54,385 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,162 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2668 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,190 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 1577 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 821 பேர் குணமடைந்து மொத்தம் 13,404 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 759 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,512 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 363 பேர் குணமடைந்து மொத்தம் 7491  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 396 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,669 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 289 பேர் குணமடைந்து மொத்தம் 6169  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 591 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12, 910 ஆகி உள்ளது.  நேற்று 23 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 231 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 370 பேர் குணமடைந்து மொத்தம் 6267 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,742 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 160 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 106 பேர் குணமடைந்து மொத்தம் 3786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அருணாசல பிரதேசம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.