டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,794 ஆக உயர்ந்து 3726 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 6568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,24,794 ஆகி உள்ளது. நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3726 ஆகி உள்ளது. நேற்று 3271 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 51,824 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,237 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2940 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,582 ஆகி உள்ளது நேற்று 63 பேர் உயிர் இழந்து மொத்தம் 1617 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 857 பேர் குணமடைந்து மொத்தம் 12,583 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 786 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,753 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 99 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 746 பேர் குணமடைந்து மொத்தம் 7128 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 363 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,273 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 802 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 392 பேர் குணமடைந்து மொத்தம் 5880 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 660 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,319 ஆகி உள்ளது. நேற்று 14 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 208 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 330 பேர் குணமடைந்து மொத்தம் 5897 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 267 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,494 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 152 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 195 பேர் குணமடைந்து மொத்தம் 3680 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.