டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,36,184 ஆக உயர்ந்து 6649 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 9471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,26,184 ஆகி உள்ளது. நேற்று 286 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6649 ஆகி உள்ளது. நேற்று 4779 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,233 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,290 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2436 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 80,229 ஆகி உள்ளது நேற்று 139 பேர் உயிர் இழந்து மொத்தம் 2849 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1475 பேர் குணமடைந்து மொத்தம் 35,156 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 235 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 661 பேர் குணமடைந்து மொத்தம் 155762 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1330 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,334 ஆகி உள்ளது. நேற்று 49 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 417 பேர் குணமடைந்து மொத்தம் 10315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,119 ஆகி உள்ளது இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 1190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 344 பேர் குணமடைந்து மொத்தம் 13,011 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 22 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,084 ஆகி உள்ளது இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 218 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 255 பேர் குணமடைந்து மொத்தம் 7359 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.