அகமதாபாத்
வரும் மே மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை அடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் அகமதாபாத் நகரும் ஒன்றாகும். இதுவரை குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்நகரில் 1638 பேர் பாதிக்கபபடுள்ளனர். இதில் 75 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 105 பேர் குணமடைந்துள்ளன்ர்.
இது குறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நேரா,”கடந்த நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காகி உளது. இதே நிலை தொடர்ந்தால் வரும் மே மாதம் 15க்குள் பாதிப்பு எண்ணிக்கை 50000 அடைந்து மேமாத இறுதியில் 8 லட்சம் ஆகி விட்டும்.
நமது நோக்கம் இந்த அதிகரிப்பு விகிதத்தை எட்டுநாட்களுக்குள் குறைப்பதே ஆகும். இது மிகவும் கடினமானதாகும். இதுவரை ஒரு சில நாடுகளில் மட்டுமே இது நிகழ்ந்துள்ள்து. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நான்கு நாட்களில் பாதிக்கப்பட்டோர் இரட்டிப்பாகும் நிலையில் தென்கொரியா இந்த 8 நாட்கள் சாதனையை நிகழ்த்தி உள்ளது.
நாம் எட்டு நாட்களுக்குள் இந்த இரட்டிப்பாவதைக் குறைத்தால் மே மாத இறுதியில் மொத்தம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்குப் பதிலாக 50000 ஆக இருக்கும். அகமதாபாத் மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் மகளின் ஒத்துழைப்பின் உதவியுடன் இந்த சாதனையை எட்டுவோம் என நம்புகிறேன்.
ஊரடங்கு முடியும் மே 3ஆம் தேதிக்குள் இந்த இரட்டிப்பு விகிதம் குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்