வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110,494 பேர் அதிகரித்து மொத்தம் 64,73,960 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4519 அதிகரித்து மொத்தம் 3,81,709 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 30,06,555 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,551 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,634 பேர் அதிகரித்து மொத்தம் 18,80,957 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1134 அதிகரித்து மொத்தம் 1,08,059 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,45,801 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,556  பேர் அதிகரித்து மொத்தம் 5,56,668 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1232 அதிகரித்து மொத்தம் 31,278 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,40,627 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,863  பேர் அதிகரித்து மொத்தம் 4,23,741  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 182 அதிகரித்து மொத்தம் 5,037 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,86,985 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 2949 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,86,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவரும் உயிர் இழக்காதாதால் மொத்த எண்ணிக்கை 27,127 ஆகவே உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8821  பேர் அதிகரித்து மொத்தம் 2,07,191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 221 அதிகரித்து மொத்தம் 5829 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,00,285 பேர் குணம் அடைந்துள்ளனர்.