வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923 பேர் அதிகரித்து மொத்தம் 63,65,173 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3259 அதிகரித்து மொத்தம் 3,77,397 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 29,03,382 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,407 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,153 பேர் அதிகரித்து மொத்தம் 18,59,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 730 அதிகரித்து மொத்தம் 1,06,925 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,15,416 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,556  பேர் அதிகரித்து மொத்தம் 5,29,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 732 அதிகரித்து மொத்தம் 30,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,11,080 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,036  பேர் அதிகரித்து மொத்தம் 4,14,878  பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 162 அதிகரித்து மொத்தம் 4,855 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,75,877 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 209 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,86,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவரும் உயிர் இழக்காதாதால் மொத்த எண்ணிக்கை 27,127 ஆகவே உள்ளது.

ஏழாம் இடத்துக்கு வந்துள்ள இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7761  பேர் அதிகரித்து மொத்தம் 1,98,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 200 அதிகரித்து மொத்தம் 5608 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 95,754 பேர் குணம் அடைந்துள்ளனர்.