வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,906 உயர்ந்து 35,63,335 ஆகி இதுவரை 2,48,135 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,906 பேர் அதிகரித்து மொத்தம் 35,63,335 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3470 அதிகரித்து மொத்தம் 2,48,135 பேர் உயிர் இழந்துள்ளனர். 1153,847 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 50,040 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,994 பேர் அதிகரித்து மொத்தம் 11,87,768 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1143 அதிகரித்து மொத்தம் 68,587 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,78,263 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 16,139 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1533 பேர் அதிகரித்து மொத்தம் 247,122பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 164 அதிகரித்து மொத்தம் 25,264 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,48,558 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2386 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1389 பேர் அதிகரித்து மொத்தம் 2,10,717 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 28,884 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 81,654 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1501 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 4339 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1.86,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 315 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 28,446 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2806 பேர் அதிகரித்து மொத்தம் 42,505 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 68 அதிகரித்து மொத்தம் 1391 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 11,775 பேர் குணம் அடைந்துள்ளனர்.