சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு நோய் குணமடையாத நிலையில், சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து.
இந்த நிலையில், கொரோனா தொற்று குணமடைந்த துரைமுருகன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.