சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,703.பேர் உயிர் இழந்து 7,57,750 பேர் குணம் அடைந்து தற்போது 11,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,14,976 பேர் பாதிக்கப்பட்டு 3,847 பேர் உயிர் இழந்து 2,07,375 பேர் குணம் அடைந்து தற்போது 3,754 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 48,572 பேர் பாதிக்கப்பட்டு 612 பேர் உயிர் இழந்து 47,041 பேர் குணம் அடைந்து தற்போது 919 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,471 பேர் பாதிக்கப்பட்டு 612 பேர் உயிர் இழந்து 46,157 பேர் குணம் அடைந்து தற்போது 601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.