இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் பிஎம் கேர்ஸ் ஃபண்ட்டுக்கு பல்வேறு தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் முதல்வர் நிவாரண நிதிக்கும் நிதியுதவிகள் வரத் தொடங்கியுள்ளன.

தற்போது நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு ரூ. 25 லட்சம் நன்கொடையாக நடிகர் அஜித் வழங்கினார்.