சென்னை:  தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,990 பேருக்கு தொற்று  பாதிப்பு  உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,  இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,990 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,025 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,37,732 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று தமிழகம் முழுவதும்  98 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,891 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,80,063 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 49,64,141 ஆக உள்ளது.

மேலும், தற்போது 52,380 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]